விஜய் டிவி நிகழ்ச்சிக்கு மீண்டும் வரும் ஜி.பி. முத்து!

பிக்பாஸ் -6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து போட்டியாளராக கலந்துகொண்டார். எனினும் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை காரணமாக போட்டியிலிருந்து பாதியில் விலகினார்.
விஜய் டிவி நிகழ்ச்சிக்கு மீண்டும் வரும் ஜி.பி. முத்து!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6   நிகழ்ச்சியிலிருந்து விலகிய ஜி.பி. முத்து மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் வரவுள்ளார். 

விஜய் தொலைக்காட்சிக்கு மீண்டும் ஜி.பி. முத்து வரவுள்ளதால் அவரின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் பலவும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தவகையில் சமீபத்தில் ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து போட்டியாளராக கலந்துகொண்டார். எனினும் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை காரணமாக போட்டியிலிருந்து பாதியில் விலகினார். இதனால் ஜி.பி. முத்து ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். பலர் இதனால் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பார்ப்பதில் ஆர்வமிழந்தனர். 

இந்நிலையில், அவர்களை மகிழ்விக்கும் விதமாக மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஜிபி முத்து கலந்துகொள்ளவுள்ளார். 

வியக் தொலைக்காட்சியில் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடித்து, நான்காவது சீசனாக குக் வித் கோமாளி தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவையுடன் சமையல் செய்யும் பிரபலரங்கள் பலரும் மக்கள் மனதுக்கு நெருக்கமானவர்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகழ், ஷிவாங்கி, பாலா, உள்ளிட்டோர் தற்போது வெள்ளித்திரையில் நடித்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி முதல் சீசனில் வனிதா டைட்டில் வின்னர் பட்டத்தை கைப்பற்றினார். அதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருதிகாவும் வெற்றி பெற்றனர். தற்போது நான்காவது சீசன் தொடங்கியுள்ளது.

இந்த சீசனில் ஜி.பி. முத்து கோமாளியாக பங்குபெறவுள்ளார். இதற்காக வெளியாகியுள்ள முன்னோட்ட விடியோவில் ஜி.பி. முத்துவும் இடம் பெற்றுள்ளார். சுனிதா, மணிமேகலை உள்ளிட்ட பலரும் கோமாளிகளாக இடம் பெற்றுள்ளனர். 

ரக்‌ஷன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். 

குக் வித் கோமாளி சீசன் 4-ல் ஜி.பி. முத்து பங்குபெறவுள்ளதால், அவரின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால், இந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பும மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com