ரத்த தானம் செய்தால் வாரிசு டிக்கெட் இலவசம்!
காஞ்சிபுரத்தில் நாளை ரத்த தானம் கொடுப்பவர்களுக்கு வாரிசு டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என்று விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் நாளை வெளியாகிறது. ரஷ்மிகா, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
உலகம் முழுவதும் நாளை அதிகாலை முதல் திரையரங்குகளில் வாரிசு படம் வெளியாகவுள்ள நிலையில், காஞ்சிபுரம் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வாரிசு திரைப்படம் வெளியாகும் நாளைய தினம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்யும் அனைவருக்கும் வாரிசு படத்திற்கான டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | வாரிசு, துணிவு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதியில்லை!
இந்த போஸ்டர் இணையதளத்தில் வேகமாக பரவி வருவதால் நாளை ரத்த தானம் கொடுக்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, வேலூரிலுள்ள திரையரங்கு ஒன்றில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் துணிவு திருவிழாவில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு இரவு விருந்து வழங்கப்படும் என்று அஜித் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.