

அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இரு படங்களும் ஒரே நாளில் மோதிக்கொண்டதால் இருவரின் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலகவிலும் இப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
மேலும் துணிவு மற்றும் வாரிசு படங்களுடன் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவான ’வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படமும் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், வீர சிம்ஹா ரெட்டி அமெரிக்காவிலுள்ள ஒரு திரையரங்கில் இன்று திரையிடப்பட்டது. இதனைக் காண வந்த ரசிகர்களில் சிலர் திரைக்கு முன் பேப்பர்களை கிழித்து வீசி கொண்டாடட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதனால், அதிக குப்பைகள் சேர்ந்தால் திரையரங்க நிர்வாகத்தினர் படம் பார்க்க வந்த அனைவரையும் பாதியிலேயே வெளியேற்றியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.