சிறந்த தென்னிந்தியப் பிரபலமாக சூர்யா தேர்வு

தமிழ்த் திரையுலகில் சூர்யா முதலிடத்திலும் விஜய் 2-வது இடத்திலும் உள்ளார்கள்.
சிறந்த தென்னிந்தியப் பிரபலமாக சூர்யா தேர்வு
Published on
Updated on
1 min read

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹியூமன் பிராண்ட்ஸ் (Indian Institute of Human Brands (IIHB)) என்கிற அமைப்பு தென்னிந்தியாவில் நடத்திய திரைப்படப் பிரபலங்கள் தொடர்பான ஆய்வில் சூர்யா முதலிடம் பிடித்துள்ளார்.

நான்கு தென்னிந்திய மாநிலங்களிலும் நவம்பர் 2022 - டிசம்பர் 2022 வரையில் 5,000-க்கும் மேற்பட்டவர்களிடம் இதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டது. நம்பிக்கை, அடையாளம் தெரிதல், கவரும் தன்மை, மரியாதை போன்றவற்றின் காரணிகளைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. விஜய், பிரபாஸ், ராம் சரண் போன்ற பிரபலங்களைப் பின்னுக்குத் தள்ளி  சிறந்த தென்னிந்தியப் பிரபலமாக சூர்யா முதலிடத்தைப் பிடித்துள்ளார். 

தமிழ்த் திரையுலகில் சூர்யா முதலிடத்திலும் விஜய் 2-வது இடத்திலும் உள்ளார்கள். தெலுங்குத் திரையுலகில் அல்லு அர்ஜுனும் மலையாளத் திரையுலகில் துல்கர் சல்மானும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com