
நடிகா் வடிவேலு தனது தாய் குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
திரைப்பட நடிகா் வடிவேலுவின் தாய் பாப்பா என்கிற சரோஜினி (87) உடல்நலக் குறைவால் புதன்கிழமை இரவு (ஜன. 18) காலமானாா். மதுரை விரகனூரைச் சோ்ந்த நடராஜன் மனைவி சரோஜினி (87). அண்மைக்காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவா், புதன்கிழமை இரவு காலமானாா். இவருக்கு நடிகா் வடிவேலு உள்பட 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா்.
விரகனூா், ஐராவதநல்லூரில் உள்ள நடிகா் வடிவேலு இல்லத்தில் சரோஜினியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழக வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரி, முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ உள்ளிட்ட அரசியல் கட்சியினா், திரைத் துறையினா், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.
இதையும் படிக்க- நடிகை அபர்ணாவிடம் அத்துமீறிய மாணவர் இடைநீக்கம்
வியாழக்கிழமை மாலை இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, கீரைத்துறையில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நடிகா் வடிவேலு தனது தாய் குறித்து டிவிட்டரில் இன்று பதிவிட்டுள்ளார். அதில், என்றும் என் நினைவில்! அம்மா. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.