

பதான் படத்திற்கு வாங்கிய டிக்கெட்டுகளை சரமாக போஸ்டர் மீது தொங்கவிட்ட ரசிகரை, ஷாருக்கான் கலாய்த்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடித்துள்ள படம் பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இசை - விஷால் & ஷேகர். இத்திரைப்படம் வருகிற ஜனவரி 25-ஆம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகின்றன.
இதையும் படிக்க- பிக்பாஸ் 6 டைட்டில் வின்னர் யார்?
படத்தின் முதல் பாடலாக பேஷரம் ரங் பாடல் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பதான் படத்திற்கு வாங்கிய டிக்கெட்டுகளை சரமாக போஸ்டர் மீது தொங்கவிட்ட ரசிகரை, ஷாருக்கான் கலாய்த்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், வீட்டுக்கு போகும்போது மறக்காமல் டிக்கெட்டுகளை கொண்டு செல்லுங்கள். மறந்துவிட்டு சென்றுவிடாதீர்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.