கவுண்டமணியின் நகைச்சுவை பாணியில் சந்தானத்தின் அடுத்த படத்தலைப்பு! 

நடிகர் சந்தானத்தின் புதிய படம் பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
கவுண்டமணியின் நகைச்சுவை பாணியில் சந்தானத்தின் அடுத்த படத்தலைப்பு! 

நாயகனாக சந்தானம் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இவரது கிக் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. 

ஏகே 62 படத்திலும் அரண்மனை 4 படத்திலும் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. சந்தானத்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சுந்தர் சி, விஜய்சேதுபதி பங்கேற்றனர். இதனால் அரண்மனை 4 உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில் புதிய படம் ஒன்றின் அப்டேட் வெளியாகியுள்ளது. கார்த்திக் யோகி எழுதி இயக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் நடிக்க உள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் சந்தானம் பகிர்ந்துள்ளார்.

உத்தமராசா திரைப்படம் 1993இல் வெளியானது. இதில் பிரபு, குஷ்பு, ரோஜா, கவுண்டமனி, செந்தில் ஆகியோர் நடித்திருந்த படம். கவுண்டமனியின் பிரபலமான வசனத்தை தலைப்பாக வைத்துள்ளனர். இந்த தலைப்பு இணையத்தில் வரலாகி வருகிறது. 

டி.ஜி. விஷ்வ பிரசாத்தின் பீபுள் மீடியா பேக்டரி தயாரிக்க சீன் ரோல்டன் இசையமைக்கிறார். மாநகரம் படத்திற்கு வசனம் எழுதியவரும் டிக்கிலோனா படத்தின் இயக்குநருமான கார்த்திக் யோகி இந்தப் படத்தினை இயக்குகிறார். 

தீபக் ஒளிப்பதிவு, மகேஷ் மேத்தீவ் சண்டைப் பயிற்சி, அறிவு மற்றும் பாக்கியம் சங்கர் பாடல்களை எழுதியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com