ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படப்பிடிப்பு நிறைவு!

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படப்பிடிப்பு நிறைவு!

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.

இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்தைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ வெளியிட்டு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதை தெரிவித்தார். பின்னர் படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் வித்தியாசமான தோற்றத்தில் இருந்தனர்.  

இசை - சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு - எஸ். திருநாவுக்கரசு. சண்டைப் பயிற்சி- திலிப் சுப்பராயன். 

இந்நிலையில்,  வேகமாக நடைபெற்று வந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு விடியோ வெளியிட்டுத் தெரிவித்துள்ளது. மேலும் இப்படம் தீபாவளிக்கு  வெளியாகுமென அறிவித்துள்ளது. 

ஏற்கெனவே தனுஷின் கேப்டன்மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படும் நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com