
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
வில்லனாக கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஆகியோர் இடம்பெற்ற டீசரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா வருகிற ஜூலை மாத இறுதியில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ நாளை(ஜூலை - 6) வெளியாகிறது.
இதையும் படிக்க: லியோ: சிறப்புத் தோற்றத்தில் தனுஷ்?
காவாலா எனத் தொடங்கும் பாடலின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. தமன்னாவின் நடனத்தில் உருவாகும் இப்பாடல் ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்று இந்தியா முழுவதும் ஒலித்த ‘ஊ அண்டாவா..’ பாடலை நினைவுப்படுத்துவதாகவும் நிச்சயம் ‘காவாலா’ ஏமாற்றாது என ரசிகர்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்!
It’s finally time for #JailerFirstSingle - #Kaavaalaa
Get ready to dance with @tamannaahspeaks on July 6th !
https://t.co/gKi3Y7ymep@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @shilparao11 @meramyakrishnan @suneeltollywood…
— Sun Pictures (@sunpictures) July 3, 2023
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.