

நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், ஆதித்ய வர்மா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் வெற்றிப்பெற்ற அர்ஜுன் ரெட்டியின் ரீமெக்கான இப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து, மகான் படத்தில் விக்ரம் உடன் இணைந்து நடித்து பெயர்ப் பெற்றார்.
துருவ் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் டாடா இயக்குநர் கணேஷ் பாபு கூட்டணியில் நடிக்க உள்ளார்.
இதையும் படிக்க: சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
இந்நிலையில், மாரி செல்வராஜ் படத்திற்கு துருவ் விக்ரம் ரூ.3 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.