மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ‘யாத்ரா’. மஹி வி ராகவ் இயக்கிய இப்படத்தில் ஒய்.எஸ்.ஆர். கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார்.
தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் மஹி வி ராகவ் இயக்க உள்ளார். இதில், ஒய்.எஸ்.ஆர். மகனும் ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்க உள்ளதாகவும் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: இந்தியன் - 2 தலை சுற்றவைக்கும் ஓடிடி விற்பனை தொகை!
நடிகர் ஜீவா தமிழில் முன்னணி கதாநாயகனாக இருந்தாலும் சமீப காலங்களில் அவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய தோல்விகளையே சந்தித்தது குறிப்பிடத்தக்கது.