
இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மிஷ்கின், அதிதி ஷங்கர், யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாவீரன்.
திரையரங்குகளில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் ஆதரவினை பெற்று அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இப்படம் வெளியான 11 நாள்களில் உலகளவில் ரூ.75 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: நான் இந்த நடிகரின் தீவிர ரசிகை: சாக்ஷி சிங் தோனி
மேலும், சிவகார்த்திகேயன் திரை வாழ்வில் குறைந்த நாளில் தமிழகத்தில் அதிகம் வசூலித்த திரைப்படம் இதுதான் என்றும் தகவல்.