சொல்ல ஒன்றுமில்லை... நடிகை ஸ்வாதி விவாகரத்து?

தமிழில் ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஸ்வாதி ரெட்டி விவாகரத்து பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொல்ல ஒன்றுமில்லை... நடிகை ஸ்வாதி விவாகரத்து?
Published on
Updated on
1 min read

தெலுங்கு நடிகையான ஸ்வாதி ரெட்டி தமிழில் ’சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின், ’கனிமொழி’, ‘போராளி’, ‘வடகறி’ ஆகிய படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மெல்ல மெல்ல மார்க்கெட் இழந்து நடிப்பதிலிருந்து விலகிக்கொண்டார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என 20க்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்த ஸ்வாதி கடந்த 2018 ஆம் ஆண்டு விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்தார். 

கணவர் விகாஸ் வாசுவுடன் ஸ்வாதி..
கணவர் விகாஸ் வாசுவுடன் ஸ்வாதி..

திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், திடீரென ஸ்வாதி சில நாள்களுக்கு முன் விகாஸ் உடன் எடுத்துக்கொண்ட திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கினார். இதனால், அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக கருத்துக்களைப் பகிர்ந்து வந்தனர். 

இந்நிலையில், இதுகுறித்து ஸ்வாதியிடம் கேட்டபோது அவர், ‘சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எனக்குத் தேவைப்பட்டால் அதைச் செய்வேன்’ என கூறியுள்ளார். மேலும், ஸ்வாதி தன் கணவரைப் பிரிந்து வாழ்வது உறுதிசெய்யப்பட்டுள்ளதால் விரைவில் விவாகரத்து பெறுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com