விஜய் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட குக் வித் கோமாளி புகழ்!

நடிகர் விஜய் ரசிகர்களிடம் குக் வித் கோமாளி புகழ் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
விஜய் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட குக் வித் கோமாளி புகழ்!

நடிகர் விஜய் ரசிகர்களிடம் குக் வித் கோமாளி புகழ் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. சமையல் போட்டியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை போலவே சமையல் கலைஞர்கள் தாமு, வெங்கடேஷ் பட் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். ரக்சன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

கோமாளிகளாக புகழ், சுனிதா, தங்கதுரை, சிங்கபூர் தீபன், பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, சின்னத்திரை நடிகை ரவீனா தாகா ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

குக்குகளில் கிஷோர் ராஜ்குமார், ராஜ ஐயப்பா, விஜே விஷால், காளையன், ஷெரின், கஜேஷ் வெளியேறியுள்ள நிலையில், தற்போது சிவாங்கி, விசித்ரா, ஆன்ட்ரியன், மைம் கோபி, சுருஸ்டி, கிரண் ஆகியோர் குக்குகளாக பங்கேற்று வருகின்றனர்.

இந்த வாரம் ஒளிப்பரப்பான  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், புகழ் விஜய் கெட்டப்பில் வந்தார். வழக்கம்போல் சுருஸ்டி மற்றும் வெங்கடேஷ் பட் புகழை கலாய்த்தனர்.

இந்நிலையில், புகழ் விஜய் ரசிகர்களிடம், “அனைத்து தளபதி ரசிகர்கள் சார்பாக மன்னிப்பு கேட்கிறேன். யாரும் தவறாக நினைக்க வேண்டாம். அனைத்தும் கற்பனையே” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதற்கு, நடிகர் மகேந்திரன், “பன்னறது எல்லாம் பன்னிட்டு இப்படி ஒன்னு சொல்லிடு” என்று விமரிசனம் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com