திருமண நாளை முன்னிட்டு மனைவி நயன்தாரா மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று பெற்றோர்களாகவும் இருக்கின்றனர்.
இந்நிலையில், முதலாம் ஆண்டு திருமண நாளான இன்று விக்னேஷ் சிவன் தங்களுக்கு வந்த பரிசுப் பொருள்கள், நயன்தாரா மற்றும் குழந்தைகள் ஆகியோரின் புகைப்படங்களை வெளியிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.
இதையும் படிக்க: மகன்களைக் கொஞ்சும் நயன்தாரா.. வைரல் புகைப்படங்கள்!