தந்தையானது மகிழ்ச்சியளிக்கிறது: பிரபு தேவா

நடிகர் பிரபு தேவாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிரபு தேவா - ஹிமானி சிங்
பிரபு தேவா - ஹிமானி சிங்

நடிகர் பிரபு தேவாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

நடன இயக்குநராக இருந்து நடிகராக,  இயக்குநராக என பாலிவுட் வரை வெற்றிகரமாக வலம் வந்தவர் பிரபு தேவா. சமீப காலமாக படங்களை இயக்குவதை விடுத்து நாயகனாக நடித்து வருகிறார். தமிழில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பொய்க்கால் குதிரை, பாகீரா ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

முன்னதாக,  பிரபுதேவா தனது மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்து பிரிந்திருந்தவர் மும்பையைச் சேர்ந்த பிசியோதெரபி மருத்துவர் ஹிமானி சிங்கை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியிருந்தது. 

இந்நிலையில், சில நாள்களுக்கு முன் ஹிமானி சிங்குக்கு பெண் குழந்தைப் பிறந்த செய்தி வேகமாக பரவியது. தற்போது, இதுகுறித்துப் பேசிய பிரபு தேவா, ‘என் 50-வது வயதில் மீண்டும் தந்தையாகியுள்ளேன். பெண் குழந்தை பிறந்தது மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கிறது. என் வம்சத்தில் முதல் பெண் குழந்தை. இனிமேல் குடும்பத்துடன் அதிக நேரம் ஒதுக்க முடிவு செய்துள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com