
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
பிச்சைக்காரன் 2 திரைப்படம் மே 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியானது. இந்நிலையில் இப்படம் வரும் 18 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ஃபர்ஹானா திரைப்படம் மே 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் நாளை(ஜூன் 16) சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
சாந்தனு நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான இராவண கோட்டம் திரைப்படம் நாளை(ஜூன் 16) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: தனுஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.