அண்ணாவையும் சேர்த்து படிக்க வேண்டும்: இயக்குநர் வெற்றிமாறன் பேட்டி! 

நடிகர் விஜய் அம்பேத்கர் போன்ற தலைவர்களை பற்றி  மாணவர்கள் மத்தியில் பேசியதற்கு இயக்குநர் வெற்றிமாறன் பதிலளித்துள்ளார்.  
அண்ணாவையும் சேர்த்து படிக்க வேண்டும்: இயக்குநர் வெற்றிமாறன் பேட்டி! 

10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் தொகுதி வாரியாக முதன்மை மதிப்பெண் எடுத்த மாணவர்களை அங்கீகரிக்கும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதில் நடிகர் விஜய் புத்தகங்களைத் தாண்டி மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். அசுரன் பட வசனத்தையும் பேசிக் காட்டினார். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி மாணவ, மாணவிகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். 

விஜய், “நாளைய வாக்காளர்கள் நீங்கள்தான். அடுத்தடுத்து புதிய நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க போகிறீர்கள். ஆனால் நம்முடைய விரலை வைத்தே நம் கண்ணை குத்துவது தான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. அதுதான் காசு வாங்கிவிட்டு ஓட்டு போடுவது. ஒவ்வொரு மாணவ, மாணவியரும் தங்கள் பெற்றோரிடம் 'காசு வாங்கி ஓட்டு போடக்கூடாது' என்று சொல்ல வேண்டும். முயற்சி செய்து பாருங்கள், நீங்கள் சொன்னால் கண்டிப்பாக நடக்கும். எதிர்காலத்தில் நீங்கள் தான் முதல்தலைமுறை வாக்காளர்கள்” எனப் பேசினார்.  

இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது: 

அசுரன் படத்தில் வரும் வசனம் செல்வாக்கு செலுத்தும் நபரான விஜய் பேசினால் இன்னமும் நன்றாக மக்கள் மத்தியில் செல்லும். அம்பேத்கர், பெரியார், காமராசருடன் அண்ணாவையும் சேர்த்து படிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com