சிம்பு, விஷால் உள்பட 5 முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்டு?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்கூட்டத்தில் 5 முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிம்பு, விஷால் உள்பட 5 முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்டு?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுவில் 5 முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், 5 நடிகர்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசியது:

“தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெற்றுக் கொண்டு படப்பிடிப்புக்கு தேதி கொடுக்காமல் தாமதம் ஏற்படுத்தும் 5 நடிகர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதை சம்பந்தப்பட்ட நடிகர்கள் மற்றும் நடிகர்கள் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

மீண்டும் பழைய நிலையை தொடர்ந்தால், பொதுவெளியில் பெயர்கள் வெளியிடப்படும். மேலும் சம்பந்தப்பட்ட நடிகர்களுடன் படம் எடுப்பதை தவிர்த்து அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, யோகி பாபு ஆகிய 5 பேர்தான் அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com