தெலுங்கு நடிகையின் புதிய தமிழ்த் தொடர்.. புதுவசந்தம்
பிரபல தமிழ்த் தொலைக்காட்சியில் புதுவசந்தம் என்ற புதிதாக நெடுந்தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. தெலுங்கு மொழித் தொடர்களில் நடித்து புகழ் பெற்ற சோனியா சுரேஷ் இந்தத் தொடர் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
நெடுந்தொடர்கள் மூலம் ஏராளமான மக்கள் மனங்களைக் கவர்ந்த சன் தொலைக்காட்சியில் புதுவசந்தம் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
தமிழில் இதற்கு முன்பு ஒளிபரப்பான அபியும் நானும் தொடரில் நடித்த ஷியாம் ஜி, இந்தத் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சோனியா சுரேஷ் நடிக்கிறார்.
விளம்பரப் படங்களில் நடிப்பைத் தொடங்கிய சோனியா சுரேஷ், படிப்படியாக உப்பென்னா, மிஸ்டர் பெல்லம் போன்ற தெலுங்கு மொழித் தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர். தற்போது புதுவசந்தம் தொடர் மூலம் தமிழில் அவர் அறிமுகமாகிறார்.
தமிழ்த் தொலைக்காட்சியில் ஊழியராக தனது பயணத்தைத் தொடங்கிய ஷியாம் ஜி, படிப்படியாக முன்னேறி சின்னத் திரை தொடர்களில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். தற்போது புதுவசந்தம் தொடரில் முதன்மை பாத்திரத்திலும் நடிக்கிறார்.
திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 1.30 மணிக்கு புதுவசந்தம் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.