
சாதியின் பெயர் கொண்ட பாடல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் இயக்குநர் சீனுராமசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் சீனுராமசாமி தனது ட்விட்டர் பதிவில், தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்கள் சினிமா & தனி இசை பாடல்கள் எதுவாயினும் அவற்றை பொது ஒலிப்பெருக்கிகளில் பொதுவிடத்தில் ஒலிபரப்பத் தடைவிதிக்க வேண்டும் என பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.
எவர் பாடல்களிலும் உசுப்பேற்றும் சாதிய துவேஷம் மறைமுகமாக இருந்தாலும் கூட தணிக்கை +தடை விதித்தல் செய்திட தமிழ்நாடு முதல்வரிடம் வேண்டுகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் தேவர் மகன் திரைப்படம் என்னனை மனப்பிறழ்விற்கு கொண்டு சென்றது. அந்தப் படத்தின் பாதிப்பினால்தான் மாமன்னன் திரைப்படத்தினை எடுத்துள்ளேன் எனப் பேசியது சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து இயக்குநர் மாரி செல்வராஜிக்கு ஆதரவும் எதிர்ப்புமாக சமூக வலதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே கமல் இதுகுறித்து மன்னிப்பு கேட்ட விடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.