

ஆதிபுருஷ் படத்தை பார்த்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கலாய்த்து ட்வீட் செய்துள்ளார்.
தெலுங்கு நடிகா் பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் திரைப்படம் கடந்த ஜூன் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வால்மீகி ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த திரைப்படம் கதாபாத்திர உருவாக்கம், வசனங்கள், காட்சியமைப்புகள், தொழில்நுட்ப பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் விமா்சனங்களை எதிா்கொண்டது.
படத்தின் இயக்குநா் ஓம் ரௌத், திரையரங்குகளில் ஹனுமனுக்கு ஓா் இருக்கையை காலியாக விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததும் விமா்சனத்துக்கு உள்ளானது. இப்படம் இந்தியாவில் சா்ச்சை எழுப்பியது மட்டுமல்லாமல், நேபாளத்திலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஆதிபுருஷ் படத்தை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அண்மையில் பார்த்துள்ளார். தொடர்ந்து படம் குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆதிபுருஷ் படத்தை பார்த்த பிறகுதான், பாகுபலி படத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பது தெரிகிறது. இவ்வாறு சேவாக் கலாய்த்து பதிவிட்டுள்ளார். தற்போது இது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.