

துல்கர் சல்மான் நடிப்பில் உருவான ‘கிங்க் ஆஃப் கோதா’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது சீதா ராமம் திரைப்படம். இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, ராஷ்மிகா ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். 5 மொழிகளில் வெளியாகி பெறும் ஆதரவினைப் பெற்றது.
தற்போது சீதா ராமம் வெற்றியை தொடர்ந்து துல்கர் ’கிங் ஆஃப் கோதா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தினை அபிலாஷ் ஜோஷி இயக்குகிறார். இதில் சார்பட்டா பரம்பரை புகழ் டேன்ஸிங் ரோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஐஸ்வர்யா லக்ஷ்மி, பிரசன்னா, செம்பன் வினோத், அனிகா சுரேந்திரன் என பலர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: சந்திரமுகி - 2 முக்கிய அப்டேட்!
இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. துல்கர் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.
இந்தப் படமும் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.