பாராட்டுவதா? பயப்படுவதா? அச்சுறுத்தும் தொழில்நுட்பம்!

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பமே இந்த நூற்றாண்டு கண்ட சலசலப்புகளில் பெரிய பேசுபொருளாக இருக்கப் போகிறது. கூடு விட்டு கூடு பாயும் வித்தைக் கதைகளைக் கேட்டு சிரித்தவர்கள் இந்தத்
பாராட்டுவதா? பயப்படுவதா?  அச்சுறுத்தும் தொழில்நுட்பம்!

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பமே இந்த நூற்றாண்டு கண்ட சலசலப்புகளில் பெரிய பேசுபொருளாக இருக்கப் போகிறது. கூடு விட்டு கூடு பாயும் வித்தைக் கதைகளைக் கேட்டு சிரித்தவர்கள் இந்தத் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மெருகேறுவதைக் கண்டு திகைக்காமல் இருக்க முடியாது. 

இத்தொழில்நுட்பத்தைக் கொண்டு எந்த ஒரு மனிதரின் உடலிலும் யாரோ ஒருவரின் முகத்தை மிக கச்சிதமாகப் பொருத்த முடிகிறது. சந்தேகமே இல்லாத வகையில் இதன் நம்பகத்தன்மை அத்தனை தெளிவாக இருக்கிறது. 

இதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் கேரளத்தைச் சேர்ந்த டாம் ஆண்டனி என்கிற மென்பொருள் பொறியாளர் பிரபல ஹாலிவுட் படமான ‘காட் ஃபாதர்’ படத்தின் ஒரு காட்சியை எடுத்து அதில் மோகன்லால், மம்மூட்டி, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் முகங்களை ஏஐ(AI) டீப் ஃபேக் எடிட்(deepfake edit) மூலம் காட்சியில் இடம்பெற்ற கதாபாத்திரங்களின் உடலில் மிகக் கச்சிதமாக பொருத்தி விடியோ ஒன்றை வெளியிட்டார். 

சில நாள்களுக்கு முன் வெளியான இந்த விடியோவை இதுவரை பல லட்சம் பேர் கண்டுள்ளனர். காரணம், உண்மையிலேயே அந்த விடியோவில் மோகன் லாலும் மம்மூட்டியும் பேசுவதுபோல்தான் இருக்கிறது. இது பலரையும் திகைக்க வைத்ததால், இதை எடிட் செய்த டாம் ஆண்டனியே இதுகுறித்து தன் யூடியூப் பக்கத்தில் நீண்ட விளக்கமளித்துள்ளார். 

முக்கியமாக, “இந்த விடியோவை வெளியிட்டதும் இத்தனை பெரிய வைரலாகும் என நினைக்கவில்லை. முதலில் மகிழ்ச்சியாக இருந்தாலும் பின் என்னைப் பலரும் தொடர்பு கொண்டு எப்படி இதைச் செய்தேன் எனக் கேட்க துவங்கினர். காரணம், யார் வேண்டுமானாலும் இதைப் போன்ற ஃபேக் விடியோக்களை உருவாக்க முடியும். உண்மையிலேயே இப்போது பயமாக இருக்கிறது. நான் இந்த விடியோவை வெளியிட காரணம், தொழில்நுட்பம் எந்த வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதைக் காட்டத்தான். ஆனால், இனி இதை முன்னோட்டமாகக் கொண்டு ஆபாச படங்களில், நிர்வாணக் காட்சிகளில் பிறரின் முகங்களை அதில் பொறுத்திப்பார்ப்பதை நினைத்தாலே பயமாக இருக்கிறது. நான் இனி பிறரின் அனுமதியில்லாமல் இந்த மாதிரியான ஃபேக் விடியோக்களை உருவாக்க மாட்டேன்” எனக் கூறியிருந்தார்.

இதுதான் இத்தொழில்நுட்பத்தின் உண்மையான பிரச்னையாகவும் இருக்கப்போகிறது. இந்த அச்சுறுத்தலைக் கண்டு இனி ஒவ்வொரு மனிதரும்  பயந்தே ஆக வேண்டும்போல.

யோசித்தால் ஒன்று புரிகிறது.. இது பொய்தான் என நம் மூளையே நம்பாத காலத்திற்கு அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com