'ஆகஸ்ட் 16, 1947' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
கௌதம் கார்த்திக் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள ஆகஸ்ட் 16, 1947 படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட், நர்சிராம் சௌத்ரி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஆகஸ்ட் 16, 1947. என்.எஸ்.பொன்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இதையும் படிக்க | ’பத்து தல’ இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் பிரபல நடிகர்!
இதில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்க, விஜய் டிவி புகழ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். சுதந்திர போராட்ட காலகட்டத்தில் இந்தக் கதை நடக்கிறது.
சான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டீசர் கடந்து ஆண்டு வெளியானது. சமீபத்தில், முதல் பாடலான ‘கோட்டிக்கார பயலே’ பாடல் வெளியானது.
இந்நிலையில், இப்படம் வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

