

மேலும் ஒரு புதிய படத்தில் சூரி நாயகனாக நடிக்க உள்ளார். ஆனால் இந்த முறை சூரி நடிக்கும் படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்.
இப்படத்தை இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்க உள்ளார். இதற்கு முன் இவர் ‘கூழாங்கல்’ என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை அனன்யா பென் நடிக்கிறார். சக்தி ஒளிப்பதிவு செய்ய கணேஷ் சிவா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
இப்படம் தொடர்பான அறிவிப்பை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர் மற்றும் விடியோவை வெளியிட்டு தெரிவித்துள்ளார். நடிகர் சூரி, சிவகார்த்திகேயனுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
ஏற்கெனவே வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக அறிமுகமாகும் விடுதலை படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில் தற்போது சூரியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.