படம்: டிவிட்டர்/சஞ்சய் தத்
படம்: டிவிட்டர்/சஞ்சய் தத்

“எனது சகோதரனாக, மகனாக இருக்கும்”: லோகேஷுக்கு சஞ்சய் தத் வாழ்த்து!

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் சஞ்சய் தத் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட பதிவு வைரலாகி வருகின்றது.
Published on

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் சஞ்சய் தத் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட பதிவு வைரலாகி வருகின்றது.

நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், இயக்குநர் கெளதம் வாசுதேவ், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்கும் லியோ என்ற படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகின்றது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வப்போது வெளியாகும் புகைப்படங்களால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துள்ளனர்.

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது 37-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் சஞ்சய் தத் டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், எனது சகோதரனாக, மகனாக, குடும்பமாக இருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். கடவுள் உங்களுக்கு எல்லா வளத்தையும் கொடுக்கட்டும். உங்கள் வாழ்க்கை முழுவதும் உங்களுடன் நான் இருப்பேன். லவ் யூ.” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் சஞ்சய் தத்தின் இந்த உருக்கமான பதிவை லோகேஷின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com