குரட்டை விடுவதால் இவ்வளவு சிக்கலா? - லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட டிரைலர்!

குரட்டை விடுவதால் இவ்வளவு சிக்கலா? - லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட டிரைலர்!

ஜெய் பீம் படத்தின் புகழ் மணிகண்டன் நடித்துள்ள குட் நைட் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
Published on

காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் கவனத்தை ஈற்றவர் மணிகண்டன். படத்திற்கு திரைக்கதை எழுதுவதிலும் நடிப்பதிலும் மிகுந்த ஆர்வமுள்ளவர் மணிகண்டன். ஜெய் பீம் படத்தின் மூலம் பெருவாரியான மக்களின் கவனத்தை ஈற்றுள்ளார். 

சமீபத்தில் தனியார் விருது விழாவில் லோகேஷ் கனகராஜை விட நான்தான் கமலின் தீவிர ரசிகர் என மணிகண்டன் மேடையில் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

தற்போது மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் குட் நைட் எனும் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ரமேஷ் திலக், மீதா ரகுநாத், பக்ஸ், பலாஜி சக்திவேல் என பலர் நடித்துள்ளனர். 

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. குரட்டை விடுவதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து இந்தப் படம் பேசியுள்ளதாக டிரைலரை பார்க்கும்போது தெரிகிறது. 

லியோ படத்தினை இயக்கிவரும் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com