

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 2 ஆம் பாக படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான வெந்து தணிந்தது காடு கடந்த ஆண்டு வெளியாகி வசூலைக் குவித்தது.
முத்து(சிம்பு) என்கிற இளைஞன் சந்திக்கும் பிரச்னைகளும் சவால்களுமாக உருவான இப்படம் ரசிகர்களிடையே கலவையான பாதிப்பையே உருவாக்கினாலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க: பிரபல ஓடிடி தளத்தைக் கைப்பற்றிய அமேசான்!
மேலும், வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றதால் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளைப் படக்குழுவினர் துவங்கியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்தின் திரைக்கதையை தீவிரமாக எழுதி வருவதாகவும் விரைவில் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.