இயக்குநர் மனோபாலாவின் உடலுக்கு எச்.வினோத் நேரில் அஞ்சலி

இயக்குநர் மனோபாலாவின் உடலுக்கு இயக்குநர் எச்.வினோத் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இயக்குநர் மனோபாலாவின் உடலுக்கு எச்.வினோத் நேரில் அஞ்சலி
Published on
Updated on
1 min read

இயக்குநர் மனோபாலாவின் உடலுக்கு இயக்குநர் எச்.வினோத் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இயக்குநர் மனோபாலா மறைவுக்கு சினிமா பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

பிரபல திரைப்பட இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு வயது 69. மனோபாலா கல்லீரல் பிரச்னை காரணமாக 15 நாள்களக சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், சென்னையில் உள்ள வீட்டில் அவர் காலமானார்.

மனோபாலா இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ஆகாய கங்கை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். மேலும் ஊர்க்காவலன், சிறைப்பறவை, பிள்ளை நிலா போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

300க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். பிதாமகன், சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை, தனுஷின் மாப்பிள்ளை போன்ற படங்களில் நகைச்சுவையில் கலக்கி இருப்பார்.

இயக்குநர் மனோபாலா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த், கொளதம் கார்த்திக், வெங்கட் பிரபு, பாரதிராஜா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள், அரசியர் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த மனோபாலாவின் உடல் நாளை (மே - 4) காலை 10 மணிக்கு சென்னை வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மனோபாலாவின் உடலுக்கு இயக்குநர் எச்.வினோத் மற்றும் மணிரத்னம் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com