விவாகரத்துக்கு இதுதான் காரணம் : சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா அதிரடி கருத்து

பிரபல தெலுங்கு நடிகரும் சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யா விவாகரத்து குறித்து கூறியுள்ளார். 
விவாகரத்துக்கு இதுதான் காரணம் : சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா அதிரடி கருத்து
Published on
Updated on
1 min read

நாக சைதன்யாவும் சமந்தாவும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உருவான ஏ மாயம் சேசாவே என்ற படத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தனர். இந்தப் படம் தான் சமந்தாவுக்கு முதல் படம். நண்பர்களாக இருந்த இருவரும் பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்திருந்தனர். 

திருமணத்துக்கு பிறகு நாக சைதன்யாவும், சமந்தாவும் இணைந்து நடித்த மஜிலி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இருவரும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்தனர். 

பின்னர் 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிகாரபூர்வமாக இருவரும் பிரிந்ததாக அறிவித்தனர். தற்போது ஆங்கில ஊடகம் ஒன்றில் நாக சைதன்யா இது குறித்து கூறியதாவது: 

நாங்கள் பிரிந்து 2 வருடங்களுக்கு மேலாகிறது; நீதிமன்றம் எங்களுக்கு விவாகரத்து அளித்தது. அதிகாரபூர்வமாக ஒராண்டுக்கு மேலாகிறது. இருவரும் அவரவர் வாழ்க்கைய பார்த்துக் கொண்டுள்ளோம். இந்தப் பிரிவிற்கு நான் மிகவும் மரியாதை தருகிறேன். 

சமந்தா இனிமையான நபர். அனைத்து விதமான சந்தோஷத்திற்கும் உரியவர். ஊடகங்களால் மட்டுமே எங்களுக்குள் பிரச்னைகள் ஆரம்பித்தது. மக்கள் பார்வையில், எங்களுக்குண்டான மரியாதை பிடுங்கப்பட்டது. இதுதான் எனக்கு அதைப்பற்றி தோன்றுகிற ஒரு விஷயம். ஆனால் சமந்தா மீதான மரியாதை அப்படியேதான் இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com