அழகுக்கு இதுதான் காரணம்: ரம்யா பாண்டியனின் வைரல் விடியோ 

நடிகை ரம்யா பாண்டியன் தனது அழகுக்கு இதுதான் காரணம் எனப் பகிர்ந்த யோகா விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அழகுக்கு இதுதான் காரணம்: ரம்யா பாண்டியனின் வைரல் விடியோ 
Published on
Updated on
2 min read

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். தொடர்ந்து சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ஆண் தேவதை படத்தில் நடித்தார். பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். 

சமீபத்தில் மலையாள நடிகர் மம்மூட்டியுடனான நடிப்பில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது ஆர்வ்-உடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். 

ரம்யா பாண்டியன் பதிவிடும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் யோகா செய்யும் புதிய விடியோவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது: 

யோகா இந்தியாவின் கலை மற்றும் அறிவியல். அது நம்மை பழங்காலத்துக்கு அழைத்து செல்கிறது. முக்கியமாக மூச்சு பயிற்சி அதன் சிறப்பம்சமாகும். மூச்சி விடுதலில் உள்ளிழுத்தல், வெளியிடுதல், இடையில் மூச்சினை நிறுத்தி வைத்தல் என பல படிநிலைகளை கொண்டது.

சில ஆசன முறைகளின்படி செய்யும்போது இரத்தம் எளிமையாக ஆக்சிஜனேற்றமடைய உதவுகிறது. இது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் முக்கியத்துவம் பெருகிறது. யோகாவை ஆர்வத்துடன் பயிற்சி செய்பவர்களுக்கு தங்களின் அழகு மிளிர்வதை உணர முடியும். அழகு என்பது பெரும்பாலும் நமது உள்ளத்தின் பிரதிபலனாகவே இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com