ஜப்பானில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது.
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் அல்லுரி சீதா ராமராஜூ (ராம் சரண்), கொமரம் பீம்(ஜூனியர் என்டிஆர்) என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை முன்வைத்து உருவாக்கப்பட்ட ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பதிவு செய்ததுடன் உலகளவில் ரூ. 1200 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்துள்ளது.
இப்படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
இதையும் படிக்க: புஷ்பா - 2 வெளியீடு எப்போது?
இந்நிலையில், ஜப்பானில் வெளியான இப்படம் இதுவரை 200 நாள்களைக் கடந்து ரூ.119 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வசூல் சாதனையைப் படைத்த முதல் இந்தியப் படம் இதுதான். ஜப்பானில் கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் ’முத்து’ திரைப்படமே வசூலில்(ரூ.20 கோடி) முதலிடத்தில் இருந்துவந்தது. தற்போது, ரஜினியின் சாதனையையும் ஆர்ஆர்ஆர் முறியடித்துள்ளது.
ராஜமௌலி அடுத்து பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு வைத்து இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.