ஜவான் முதல் ரத்தம் வரை: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் முதல் விஜய் ஆண்டனியின் ரத்தம் வரை,  இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடியில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
ஜவான் முதல் ரத்தம் வரை: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் முதல் விஜய் ஆண்டனியின் ரத்தம் வரை,  இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடியில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

ஜவான்

ஜவான் திரைப்படம் இன்று (நவ.2) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில்  ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரத்தம் 

ரத்தம் திரைப்படம் வருகிற நவ.3 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா என 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். 

இறுகப்பற்று

நடிகர்கள் விக்ரம் பிரபு, மாநகரம் புகழ் ஸ்ரீ, விதார்த் ஆகியோர் நாயகர்களாகவும், நடிகைகள் ஷரத்தா ஸ்ரீநாத், அபர்ணா நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் நாயகிகளாக நடித்த இறுகப்பற்று திரைப்படம், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் நவ.6-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆர்யா சீசன் 3 வைப் தொடர் நவ.3-ல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலும், ஸ்கேம் 2003 வெப் தொடரின் இரண்டாம் பாகம் சோனி லைவ்-ல் நவ.3 ஆம் தேதி வெளியாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com