வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஜப்பான் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

நடிகர் கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2023, 8:20 am

DIN


நடிகர் கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அனு இமானுவேல் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜப்பான் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. மேலும் தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.  

திருச்சியில் நடந்த உண்மை சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள ஜப்பான் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், ஜப்பான் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Story image

மேலும், படத்துக்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதே நாளில், நடிகர் விக்ரம் பிரபுவின் ரெய்டு வெளியாகவுள்ள நிலையில், நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படமும் போட்டியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.