பிக் பாஸ்: அதிரடியாக வெளியேற்றப்படும் போட்டியாளர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து இந்தப் போட்டியாளர் அதிரடியாக வெளியேற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிக் பாஸ்: அதிரடியாக வெளியேற்றப்படும் போட்டியாளர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிக் பாஸ் போட்டியில் இந்த வாரம் மக்களிடம் குறைவான வாக்குகள் பெற்று வெளியேறும் நபரல்லாது இன்னொருவர் ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இவர்களில் அனன்யா, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா தேவி ஆகியோர் ஒவ்வொரு வாரமும் அடுத்தடுத்து வெளியேறினர். பவா செல்லதுரை உடல்நிலை காரணமாகத் தாமாகவே முன்வந்து வெளியேறினார்.

இந்த நிலையில், 4-வது வார இறுதியில் தினேஷ், கானா பாலா, பிராவோ, அர்ச்சனா, அன்னபாரதி ஆகிய 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர்.  

5-வது வாரத்தில் நடந்த போட்டியில் பிரதீப் மற்றும் கூல் சுரேஷ் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் பிரதீப் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார். 

பிரதீப் ஆண்டனி
பிரதீப் ஆண்டனி

அதன் காரணமாக சக போட்டியாளர்கள், கமல் கலந்து கொள்ளும் வார இறுதி நாள் நிகழ்வில் உரிமை குரல் எழுப்பிய முன்னோட்ட காட்சி வெளியாகியுள்ளது.

பிரதீப் ஆண்டனி, பிக் பாஸ் சீசன் 7 போட்டியில் இருந்து ரெட் கார்டு வழங்கப்பட்டு அதிரடியாக வெளியேற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறுதி போட்டி வரை நீடிக்கக் கூடியவர் எனக் கருதப்பட்ட பிரதீப் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட தகவலால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். 

இந்த வாரம் வெளியேற்ற வேண்டியவர் என சக போட்டியாளர்கள் தீர்மானித்த நாமினேஷன் பட்டியலில் இருந்து குறைவான வாக்குகள் பெற்றதால் அன்ன பாரதி வெளியேற்றப்பட்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com