நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

தெலுங்கு நடிகருடன் திருமணமா?: என்ன சொல்கிறார் மிருணாள் தாக்குர் 

தெலுங்கு நடிகரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த சில நாட்களாக உளவி வரும் தகவல்களை நடிகை மிருணாள் தாக்குர் மறுத்துள்ளார். 

Published On :2 பிப்ரவரி 2024, 8:47 am IST

தெலுங்கு நடிகரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த சில நாட்களாக உளவி வரும் தகவல்களை நடிகை மிருணாள் தாக்குர் மறுத்துள்ளார். 

சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்குர். காதலை மையமாகக் கொண்டு உருவமான இந்த படம் 1964-ம் ஆண்டு நடப்பது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் வெற்றி மிருணாள் தாக்குருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றுத் தருகிறது. இருப்பினும் அவர் தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களுக்கு மட்டுமே அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். 

தெலுங்கில் நானிக்கு ஜோடியாக ‘ஹாய் நான்னா’ என்கிற படத்திலும் அவர் நடித்து வருகிறார். விரைவிலேயே சிவகார்த்திகேயன் படத்திலும் மிருணாள் தாக்குர் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதுதொடர்பான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நடிகை மிருணாள் தாக்குர் திருமணம் குறித்து கடந்த சில நாட்களாக தகவல் ஒன்று உளவி வருகிறது. 

அதாவது, விரைவிலேயே அவர், தெலுங்கு நடிகர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்பதுதான். ஆனால் இந்த தகவலை மிருணாள் தாக்குர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். என்னுடைய திருமணம் பற்றி பரவி வரும் தகவல் முற்றிலும் தவறான வதந்தி. நானும் அந்த நடிகர் யார் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். மேலும், இது மிகவும் வேடிக்கையானது.

இந்த வதந்தி எவ்வளவு வேடிக்கையானது என்பதை என்னால் வெளிப்படுத்த முடியாது. ஆனால், விரைவில் திருமணம் செய்து கொள்வேன். இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.