உரிமைக் குரல் தூக்கிய பெண்ணியவாதிகள் எங்கே போனார்கள்? வினுஷா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வினுஷாவை பற்றி நிக்‌ஷன் கூறிய விஷயங்கள் அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உரிமைக் குரல் தூக்கிய பெண்ணியவாதிகள் எங்கே போனார்கள்? வினுஷா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வினுஷாவை பற்றி நிக்‌ஷன் கூறிய விஷயங்கள் அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 போட்டியில் இருந்து போட்டியாளர் பிரதீப் ஆண்டனி ‘ரெட் கார்டு’ கொடுத்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இந்த சீசனின் ‘டைட்டில் வின்னர்’ என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட பிரதீப்பின் வெளியேற்றம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

சக போட்டியாளர்களான மாயா, பூர்ணிமா, ரவீனா, மணி, நிக்சன் உள்ளிட்டோர் பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை போன்ற குற்றச்சாட்டை கமல்ஹாசன் முன்பு முன்வைத்தனர்.

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து வீட்டிலிருந்த போட்டியாளர்களிடம் தனியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், பெரும்பாலானோர் பிரதீப்புக்கு எதிராக வாக்களித்ததால் கமல் வெளியேற்றினார்.

இந்த நிலையில், நேற்று பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது. பிக் பாஸ் போட்டியாளர்கள் சக போட்டியாளர்கள் குறித்து புறம் பேசியதை, திரையில் போட்டு விளக்கம் கேட்கப்பட்டது.

அப்போது, வினுஷா தேவியின் உடல் அமைப்பு குறித்து நிக்‌ஷன் பேசியது திரையில் காண்பிக்கப்பட்டது. இதனை கண்ட விசித்திரா, அர்ச்சனா உள்ளிட்டோர் நிக்‌ஷனுக்கு எதிராக கேள்வி எழுப்பினர்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிக்‌ஷன், “நான் தவறான எண்ணத்தில் பேசவில்லை. இதுகுறித்து வினுஷாவிடம் பேசியுள்ளேன்.” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், ஏற்கெனவே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய வினுஷா, நிக்‌ஷனின் செயல் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

வினுஷா தேவி வெளியிட்ட பதிவு:

“எனக்காக நான் நிற்கிறேன். நான் இப்போது பிக் பாஸ் வீட்டில் இல்லாமல் போகலாம். ஆனால், எனக்காக நான் நிற்க வேண்டும். பிக் பாஸ் வீட்டில் எனக்கும் நிக்‌ஷனுக்கும் தொடக்கத்தில் நல்ல உறவு இருந்தது. அவனை என் தம்பி போல் நினைத்தேன். அதனை வைத்து கேலி செய்வான். ஆரம்பத்தில் அது நல்ல விதமாகவும், விளையாட்டாகவும் இருந்ததால் கண்டுகொள்ளவில்லை.

ஆனால், இது எல்லை மீறி போனதால், இத்துடன் நிறுத்திக் கொள்ளுமாறு நிக்‌ஷனிடம் தெரிவித்தேன். ஒருநாள் நிக்‌ஷன் என்னிடம் மன்னிப்பு கேட்டான். என்னை கேலி செய்ததற்காக தான் மன்னிப்பு கேட்கிறான் என்று நினைத்தேன். அவன் எனது உடலை பற்றி கூறியது எனக்கு தெரியாது.

நிக்‌ஷன் என்னைப் பற்றி இப்படி பேசியது எனக்கு தெரியும் எனக் கூறியது முற்றிலும் பொய். பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பிறகுதான் எனக்கு தெரியும்.

பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் உரிமைக் குரல் எழுப்பிய பெண்கள் எங்கே போனார்கள்?. எனக்காக குரல் கொடுத்த விசித்திராவுக்கு நன்றி. இதுகுறித்து இந்த வார நிகழ்ச்சியில் கமல் பேசுவார் என்று நினைக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பெண்களை கேலி செய்கிறார் என்று குற்றம்சாட்டிய மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐஸு உள்ளிட்டோர் நிக்‌ஷனின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்காதது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com