பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் நானா படேகர். தமிழில் காலா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது, வில்லனாக, குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில், வாரணாசியில் நடைபெற்று வந்த ‘ஜர்னி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நானா படேகரிடம் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றார். இதை எதிர்பாராத நானா படேகர், திடீரென ரசிகரின் தலையில் அடித்தார். இந்த விடியோ இணையத்தில் வெளியாகி கடும் விமர்சனங்களைக் கிளப்பியது.
இதையும் படிக்க: ஜிகர்தண்டா - 2 திரைகள் அதிகரிப்பு!
இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்து நானா படேகர் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஒரு காட்சிக்காக நான் ஒருவரை அடிக்க வேண்டியிருந்தது. அதற்கான ஒத்திகையில் இருந்தபோது அந்த ரசிகர் திடீரென உள்ளே வந்துவிட்டார். நான் அவரை நடிகர் என நினைத்து தவறுதலாக அடித்துவிட்டேன். பின், அவர் எங்கள் குழுவைச் சேர்ந்தவர் இல்லை எனத் தெரிந்தவுடன் அவரை அழைத்தேன். ஆனால், அந்த ரசிகர் பயத்தில் ஓடி விட்டார். என்னுடன் புகைப்படங்களை எடுக்க வேண்டாம் என நான் யாரிடமும் கூறுவதில்லை. முற்றிலும் தவறுதலாகவே இச்சம்பவம் நடந்தது. இனி இப்படி நடந்து கொள்ள மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.