திரையரங்கு சங்க பதவியிலிருந்து திருப்பூர் சுப்பிரமணியம் ராஜிநாமா!
தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பதவியை திருப்பூர் எம்.சுப்ரமணியம் ராஜிநாமா செய்தார்.
இதுகுறித்து சங்கத்தின் செயலாளருக்கு சுப்ரமணியம் எழுதிய கடிதத்தில், சொந்த வேலை காரணமாக தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும், திருப்பூர் மாவட்ட திரையரங்கம் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, திருப்பூரில் உள்ள சுப்ரமணியத்தின் திரையரங்கில் நடிகர் சல்மான் கானின் ‘டைகர் 3’ திரைப்படத்தை அரசின் அனுமதியின்றி 6 காட்சிகள் திரையிடப்பட்டதற்காக மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதையும் படிக்க | லியோ படத்தால் லாபமில்லை - திருப்பூர் சுப்ரமணியம்
அதேபோல், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படத்தால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபமில்லை என்று சுப்ரமணியன் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

