மலையாளத்தில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா?

இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நேரடி மலையாளப் படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா?

இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தற்போது முழுநேர நடிகராக இருக்கிறார். கதாநாயகனாகவும் பெரிய படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும்,’கேம் சேஞ்சர்’, ‘இந்தியன் - 2’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

இறுதியாக, வெளியான மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரிதாகப் பேசப்பட்டது. 

இந்நிலையில், இவர் நேரடி மலையாளப் படமொன்றில் நடிக்க உள்ளதாகவும் இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com