நான் சலசலப்புக்கு அஞ்சுறவனா? மன்சூர் அலிகான் விளக்கம்!

நான் இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சுபவனா என்று த்ரிஷா குறித்த சர்சை பேச்சுக்கு மன்சூர் அலிகான் விளக்கமளித்துள்ளார்.
நான் சலசலப்புக்கு அஞ்சுறவனா? மன்சூர் அலிகான் விளக்கம்!
Published on
Updated on
1 min read

நான் இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சுபவனா என்று த்ரிஷா குறித்த சர்சை பேச்சுக்கு மன்சூர் அலிகான் விளக்கமளித்துள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்கள் சந்திப்பில், லியோ திரைப்படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சிகள் அமைக்கப்படவில்லை என்று சர்சைக் கருத்தை தெரிவித்தார்.

மன்சூர் அலிகானின் இந்த சர்சை பேச்சு தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

"திடிர்னு த்ரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு பசங்க, வந்த செய்திகள அனுப்பிச்சாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல. நான் வர்ர தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பா போட்டியிடறேன்னு சொன்ன வேளையில வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவிவிட்டுருக்கானுக. 

உண்மையில அந்த பொண்ண உயர்வாத்தான் சொல்லிருப்பேன். அனுமாரு சிரஜ்சீவி மலைய கையிலேயே தாங்கிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்துலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க. பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சரவனா. 

த்ரிஷாட்ட தப்பா விடியோவ காட்டிருக்காங்க. அய்யா என்கூட நடிச்சவங்கள்ளாம் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி. மந்திரின்னு ஆயிட்டாங்க பல கதாநாயகிகள். பெரிய தொழில் அதிபர்கள கட்டிட்டு செட்டில் ஆகிட்டாங்க. மேலும். லியோ பூஜையிலேயே என் பொண்ணு தில் ரூபா உங்களோட பெரிய FAN ணுன்னு சொன்னேன். 

இன்னும் 2 பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணனும். 360 படங்கள்ல நடிச்சிட்டேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாத குடுக்கறவன் எல்லாருக்கும் தெரியும். சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என்ட்ட வேகாது. திரிஷாட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது. உலகத்துல எத்தனயோ பிரச்சின இருக்கு... பொழப்ப பாருங்கப்பா" என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com