கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

தீபாவளிக்கு வெளியான திரைப்படங்கள் பெரியளவில் வரவேற்பை பெறாததால், இந்த வாரம் வெளியாகும் படங்கள் குறித்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம்.  இந்தப் படத்தில் ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா, விநாயகன், திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நவ.24 அன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 80ஸ் பில்டப் திரைப்படம் வரும் நவ.24 ஆம் தேதி வெளியாகிறது. நடிகர்கள் வித்தார்த், யோகி பாபு நடித்துள்ள குய்கோ திரைப்படம் நவ. 24 ஆம் தேதி வெளியாகிறது.

ரிச்சர்ட் ரிஹி, யாஷிகா ஆனந்த் நடித்துள்ள சில நொடிகளில் திரைப்படம் மற்றும் ரியோ நாயகனாக நடித்துள்ள ஜோ திரைப்படம் வரும் நவ. 24 ஆம் தேதி வெளியாகிறது. கங்கனா ரணாவத்தின் எமர்ஜென்சி திரைப்படம் நவ. 24 ஆம் தேதி வெளியாகிறது. 

மேலும், மலையாளத்தில் மம்முட்டி மற்றும் ஜோதிகாவின் காதல் கேர் திரைப்படம் நவ. 23 ஆம் தேதி வெளியாவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com