
கல்விக்கு வயது அவசியமில்லை என்பது மலையாள நடிகர் இந்திரன்ஸ் செயலால் மற்றுமொரு முறை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இளமையில் வறுமையைச் சந்தித்ததால் அவரால் தொடர்ந்து படிக்க இயலவில்லை. நான்காம் வகுப்பு வரை படித்தவர், அதன் பிறகு பல்வேறு வேலைகளைப் பார்த்துள்ளார்.
1981-ல் துணி தைக்கும் நிலையத்தில் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆடை வடிவமைப்பில் வேலை செய்தவர், அதன் பிறகு நடிகராகத் தன்னை வளர்த்துக் கொண்டுள்ளார். 40 வருடங்களுக்கு மேலாகத் திரைத்துறையில் நடிகராக வலம்வருகிறார்.
மாநில அரசின் பல்வேறு விருதுகள், தேசிய விருது ஆகியவற்றை வென்றுள்ள இந்திரன்ஸ் தற்போது இளமையில் விட்டுப் போன படிப்பைத் தொடர முடிவு செய்து படித்து வருகிறார்.
தனது வீட்டிற்கு அருகிலுள்ள அரசுப் பள்ளியில் வார இறுதி வகுப்புகளுக்குச் சென்று பத்தாம் வகுப்பு தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.
இதையும் படிக்க: படப்பிடிப்புத் தளத்தில் ரஜினிகாந்த் - கமல்: வைரல் புகைப்படம்
படிப்பு இல்லாதது என்பது கண் பார்வை இல்லாததற்குச் சமம் எனச் சொல்லும் இவர், நடிகர் ஆசிப் அலி நடிக்கும் ஒட்டா படத்தில் நடித்துள்ளார். புள்ளி, நுனா, நடிகர் திலகம் உள்ளிட்ட பல முக்கிய படங்களில் இந்திரன்ஸ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.