‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ள அனிமல் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தில் வன்முறை காட்சிகள் ரத்தம் தெறிக்கக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அப்பா மகனுக்கிடையில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள படம், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனிமல் படத்தின் டிரைலர் காட்சி
இயக்குநரின் சொந்தத் தயாரிப்பான பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரித்துள்ள படத்தில் பிரபல நடிகர் சன்னி தியோலின் சகோதரரான பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் கங்குவா படத்திலும் பாபி தியோல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் டிச.1-ம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

