
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான ஈரமான ரோஜாவே - 2 தொடர் வரும் சனிக்கிழமை(டிச.2) நிறைவடையவுள்ளது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை நண்பகல் 1 மணிக்கு ஈரமான ரோஜாவே பாகம் 2 தொடர் ஒளிபரப்பாகிவருகிறது.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டாவது சீசனில் திரவியம் ராஜகுமரனுக்கு ஜோடியாக நடிகை ஸ்வாதி நடித்து வருகிறார். சித்தார்த்துக்கு ஜோடியாக கெபிரியல்லா நடிக்கிறார்.
ஈரமான ரோஜாவே தொடர் இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளைய தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது.
இதையும் படிக்க: பிரபல தொடரில் இணையும் பாண்டவர் இல்லம் நடிகை!
இந்த சீரியலின் இறுதிக்கட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கிளைமேக்ஸ் காட்சிகளின்போது, படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.