
மார்க் ஆண்டனி படத்திற்காக சென்சார் அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கில் நடிகர் விஷால் மும்பை சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜரானார்.
விஷால் நடிப்பில் செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் கலவையான விமரிசனங்களைப் பெற்றது.
ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம், ஹிந்தி மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
இதனிடையே, மகாராஷ்டிரத்தில் இப்படத்தின் டப்பிங் மற்றும் திரையிடலுக்காக அதிகாரிகள் தன்னிடம் ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், படம் வெளியாக வேண்டும் என்பதால் இரண்டு பரிவர்த்தனைகளாகக் கேட்ட தொகையைக் கொடுத்ததாகவும் விஷால் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திரைப்பட தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக நடிகர் விஷால் கூறிய புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
லஞ்சம் பெற்ற திரைப்பட தணிக்கைத் துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவும் செய்தது.
இதையும் படிக்க: ஆட்டோவில் பயணித்த ராகுல் காந்தி!
இந்த நிலையில், நடிகர் விஷால் மற்றும் அவரின் மேலாளர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் சிபிஐ விசாரணைக்காக மும்பை சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜராகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.