விஜய் ஆண்டனியின் வள்ளி மயில் டீசர்!

விஜய் ஆண்டனி நடிக்கும் வள்ளி மயில் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனியின் வள்ளி மயில் டீசர்!


இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம், 'வள்ளி மயில்'. இதில், பாரதிராஜா, சத்யராஜ், ‘புஷ்பா’ சுனில், கயல் தேவராஜ், ஃபரியா அப்துல்லா, தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, அறந்தாங்கி நிஷா உட்பட பலர் நடிக்கின்றனர். 

டி.இமான் இசையமக்க படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. 1980 -களில் புகழ் பெற்ற 'வள்ளி திருமணம்' நாடகத்தை பின்னணியாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

மிகுந்த பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் டீசரைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com