10 ஆண்டுகளுக்கு டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து!

பிரபல யூடியூபா் டிடிஎஃப் வாசனது ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவித்துள்ளார். 
10 ஆண்டுகளுக்கு டிடிஎஃப் வாசனின்  ஓட்டுநர் உரிமம் ரத்து!
Published on
Updated on
1 min read


பிரபல யூடியூபா் டிடிஎஃப் வாசன் கடந்த செப். 17-ஆம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. பைக் பல அடி தொலைவுக்கு பறந்து விழுந்தது. அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் அவா் கைது செய்யப்பட்டாா். அவா் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

காயத்துக்கு சிறை மருத்துவா்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இளைஞா்களைத் தூண்டும் வகையில் செயல்பட்ட மனுதாரா், தனது யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரித்துவிட்டு வரும்படி கருத்து தெரிவித்தாா். 

இந்நிலையில் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவித்துள்ளார். அதாவது 6.10.2023 முதல் 05.10.2033 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மஞ்சள் வீரன் எனும் படத்தின் மூலம் டிடிஎஃப் வாசன், கதாநாயகனாக அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் வாசனுக்கு நேர்ந்தது குறித்து சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com