
நடிகர் ஷாருக்கானுக்கு அச்சுறுத்தல்கள் வந்ததால் அவருக்கு மகாராஷ்டிர அரசு ஒய்-பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது.
பாலிவுட் பாஷா என அழைக்கப்படுபவர் ஷாருக்கான். அண்மையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
அதேபோல் ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பதான் படமும் ஆயிரம் கோடி வசூலித்தது. ஜவான், பதான் என அடுத்தடுத்து இரண்டு பெரிய வெற்றி கொடுத்த நடிகர் ஷாருக்கானுக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்திருப்பது குறித்து உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனால் அவருக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, மகாராஷ்டிரத்தின் சிறப்பு பாதுகாப்பு படையைச் சேர்ந்த 6 துப்பாக்கி ஏந்திய போலீசார் அவருக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்க உள்ளனர். மேலும் ஷாருக்கானின் வீட்டிற்கும் 5 துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்படுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.